கொரோனாவை விரட்டுவதில் தீவிரம்! முதல்வரின் உத்தரவுகள்! ஊரடங்கை நீட்டித்தும் உத்தரவு!  - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந்தியா முழுவதும் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையில் இருந்தாலும் பொதுமக்கள் சிலர் அதற்கு சரியான ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றனர். 

இந்த நிலையில் பொதுமக்கள் பல காரணங்களை கூறுவதை கட்டுப்படுத்த கூறி வெளி வருவதை கட்டுப்படுத்த அதற்காக ஒவ்வொரு ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தமிழக அரசு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் இந்த உத்தரவுக்கு  மறுப்பு தெரிவித்து, உணவகம் மளிகை கடை நாள் முழுவதும் இயங்க உத்தரவு எனவும், நேர வரம்பு இன்றி உணவகம் மற்றும் மளிகை கடை இயங்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சற்றுமுன் வெளியான நேர வரம்பிற்கு மறுப்பு தெரிவித்து, மறு அறிவிப்பு வெளியீட்டுள்ளது. 

கொரோனா பரவலை தடுப்பதற்காக 9 மூத்த அதிகாரிகள் தலைமையிலான அடங்கிய குழுவானது தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது இவர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதேபோல முன்னதாக தமிழக அரசு 144 தடை உத்தரவை ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை அறிவித்திருந்தது இந்த நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இருப்பதால் ஏப்ரல் 14 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவினை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அடுத்து யாரும் பணிக்கு செல்ல முடியாத காரணத்தினால் தனியார் வங்கி, நிதி நிறுவனம், சுய உதவி குழுக்கள் என பணம் செலுத்திவருபவர்களுக்கு வருமானம் இல்லாததால் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்களிடம் யாரும் வசூலில் ஈடுபட கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தினசரி வார மாத கடன் வசூலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அதிகமாக கூடும் மளிகை கடை மருந்து கடை சந்தை போன்ற இடங்களில் சமூக இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் மூன்றடி தூரத்தில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வரும் கர்ப்பிணி பெண்கள் காச நோய் சர்க்கரை ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மருந்துகளை முன்னதாகவே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல கர்ப்பிணி பெண்கள் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நபர்கள் அரசின் அவசர ஊர்தி மூலம் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண்மை பொருட்களை  ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடை கிடையாது எனவும் ஆடு மாடு இறைச்சி முட்டை கால்நடை தீவனங்கள் போன்ற வாகனங்களுக்கு தடை இல்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணிகளில் ஈடுபடும் தனியார் வாகனங்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அடையாள அட்டையை பெற வேண்டும் எனவும். மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெறுகிறார்கள் என்பதை மாவட்ட ஆட்சியரின் உறுதிபடுத்த வேண்டுமெனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

வழிபாட்டுத்தலங்கள் கடைகள் போன்றவற்றை மிகப்பெரிய இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் அங்கே சமூக விலகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 54 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் . கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களின் குடும்பத்தினர் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியே வரவே கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மளிகை பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் செய்லபட எவ்வித தடையும் இல்லை. அதே சமயம் சமைக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தடை செய்யப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வை தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM announcement for corona awareness


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal