3 ஆண்டுகள் சிறை... செந்தில்பாலாஜிக்கு பதில் ரகுபதி! சற்றுமுன் சட்டப்பேரவையில் நடந்த மாற்றம்! தாக்கல் செய்யப்பட்ட மசோதா!
TN Assembly Senthilbalaji Rahupathi
உயிரி மருத்துவக் கழிவுகளை விதிமுறை மீறி கொட்டுபவர்களுக்கு எதிராக, விசாரணை இன்றி நேரடியாக சிறைத் தண்டனை வழங்கும் வகையில் கடும் சட்ட மாற்றம் கொண்டுவரப்படும் என நேற்று தகவல் வெளியானது.
இதற்கான சட்ட முன்வடிவை இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளிநாடு.
இந்நிலையில், திடீர் திருப்பமாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி இந்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, மருத்துவக் கழிவுகளை தவறான முறையில் காட்டுபவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தண்டனை மிக கடுமையாக இருக்கும்.
மருத்துவ மற்றும் ஆய்வகங்களில் இருந்து உருவாகும் உயிரி கழிவுகள் சரியான முறையில் நிர்வகிக்கப்படாதால், அது சுற்றுச்சூழலையும் மக்களின் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும்.
குறிப்பாக, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் முறைகேடாக உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான புகார்கள் அதிகரித்து வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு, இனி இந்த வகை தவறுகள் செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Assembly Senthilbalaji Rahupathi