நிலாவுல இருந்து தமிழகத்தை பார்த்தா "தமிழ்" தெரியும்! சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்ற சொல் தெரியும் அளவுக்கு 100 ஏக்கரில் காடுகள் உருவாக்கப்படும் என்று, சட்டப்பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். 

சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். அதில் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :

* 50 பள்ளிகளில் கால நிலை மாற்றம் குறித்து அறிய 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை பள்ளிக்கூடத் திட்டம். 

* காலநிலை மாற்றம் தொடர்பாக பள்ளிகளில் செயல்படும் சூழல் மன்றங்கள், காலநிலை மன்றங்களாக புதுப்பித்து மாற்றியமைக்கப்படும். 

* பசுமை தமிழ்நாடு திட்டத்தின்கீழ் 1,000 குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும். 

* உள்ளாட்சி நிறுவனங்களுக்கு இடையே, காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமை சவால் நிதி உருவாக்கப்படும். 

* பொதுமக்கள் அதிகளவில் கூடும் மையங்களில் சூழலுக்குகந்த பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க 50 லட்சம் ரூபாயில் சூழலுக்குகந்த வாழ்வியல் சான்றிதழ் வழங்கப்படும். 

* நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில், 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்க திட்டம்.

* சென்னையில் குப்பை சேகரிப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly Minister Meyyanathan Announce 2023


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->