அசதியை போக்க மது தேவை! டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை - Soft Drink! - அதிரவைத்த துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியதும் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட முன்வடிவை மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்து, பின்னர் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட திருத்தத்தின்படி கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 லட்சம் அபராதமும் விதிக்க இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும் கள்ளச்சாராய குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், ஜாமின் முறிவினை நிறைவேற்ற நிர்வாக துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்ட திருத்தம் குறித்த மசோதா மீது பேரவையில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பாமக சட்டமன்ற குழுத்தலைவர் ஜி.கே.மணி பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்க்கு பதிலளித்து பேசிய  அவை முன்னவர் துரைமுருகன், "கர்நாடகா, கேரளா, ஆந்திரா,  புதுச்சேரி என தமிழகத்தை சுற்றி இருக்கும் மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நிலைமை இப்படி இருக்க தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்க முடியும்..? உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. 

ஆனால் அரசு விற்கும் டாஸ்மாக் மதுவில் தேவையான கிக் இல்லாததால், அரசு விற்கும் சரக்கு soft drink  போல மாறிவிடுகிறது. கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்" என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனையடுத்து பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் தற்போது இல்லை. படிப்படியாக கடைகளை மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்" என்று சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார்.

இதற்கிடையே, மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் முன்வரைவு மீதான விவாதத்தில், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் பிணையில் வர முடியாத அளவுக்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்தார்.

இதற்கான ஷரத்துகளை சேர்ப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளிக்க, மதுவிலக்கு சட்டத்தில் இன்னும் பல்வேறு திருத்தங்கள் தேவைக்கேற்ப கொண்டு வரப்படும். கள்ளச்சாராயத்தை தடுக்கும் வகையில் கடுமையான திருத்தங்களும் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly Duraimurugan say about TASMAC Liquor


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->