தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு..? அதிரடி காட்டும் ஆட்சியாளர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது வரை 269 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா வைரஸை விட வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக சென்னை - 26, மதுரை - 4, திருவண்ணாமலை - 2, சேலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே, மதுரை, சென்னை, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் இரவுநேர ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று அரசு தரப்பில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இதுகுறித்து அறிவிக்கவுள்ளார்கள் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn 4 districts get Night lockdown


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->