காஞ்சிபுரம்: பணிக்கு சென்ற காவல் அதிகாரி விபத்தில் மரணம்... கண்ணீரில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் கிராமத்தை சார்ந்தவர் வெங்கடேசன் (வயது 26). இவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தேர்தல் நடைபெற இருப்பதால், வெங்கடேசனிற்கு தேர்தல் பறக்கும்படை குழுவுடன் பணி வழங்கப்பட்டு இருந்தது. 

நேற்று, காஞ்சிபுரத்தில் இருந்து பணி நிமித்தம் காரணமாக சென்னைக்கு புறப்பட்ட காவல் அதிகாரி வெங்கடேசன், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் தென்னேரி கூட்டுரோடு பகுதியில் செல்கையில், எதிரே வந்த இருசக்கர வாகனம் வெங்கடேசனின் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. 

இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காவல் அதிகாரியை மீட்ட அப்பகுதி மக்கள், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அதிகாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கடந்த 2017 ஆம் வருடத்தில் பணிக்கு சேர்ந்த காவல் அதிகாரி வெங்கடேசனிற்கு தற்போது வரை திருமணம் முடியவில்லை. இந்த விஷயம் தொடர்பாக வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Siva Kanchi Police Officer Venkatesan Died in Accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal