உணவகத்தில் 15 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது - ஆரணியில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஆரணியில் உணவுப்பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில், 15 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி - லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46). அரிசி ஆலையின் தொழிலாளியாக ஆனந்த் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பிரியதர்ஷினி. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு 10 வயது லோஷினி என்ற மகளும், 14 வயது சரண் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த 8 ஆம் தேதி ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில், காதர்பாஷா என்பவர் நடத்தி வரும் 7 ஸ்டார் பிரியாணி கடையில் தந்தூரி பிரியாணியை சாப்பிட்டு உள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில் சிறுமி லோஷினிக்கு உடல்நலம் மோசமான காரணத்தினால், அவர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி லோஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், அந்த 7 ஸ்டார் ஓட்டலில் உணவு சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாக தற்போது வரை 40 பேர் மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கின்றனர். 

இதனையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், 7 ஸ்டார் பிரியாணி ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரிகளை சேகரித்து விசாரணை நடத்தி உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உணவகத்தின் உரிமையாளர் காதர் பாஷா, சமையலர் முனியாண்டி ஆகியோரை கைது செய்துள்ளனர். 

இந்த விஷயம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆரணியில் உள்ள பிற அசைவ உணவகத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்தனர். தற்போது வரை மேற்கொண்ட ஆய்வுகளின் படி, சுமார் 15 கிலோ அளவிலான கெட்டுப்போன இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டுள்ளது.  

இந்த சம்பவம் அம்மாவட்ட மக்களை மட்டுமல்லாது, தமிழகமெங்கும் உள்ள மக்களை பதற வைத்துள்ளது. மேலும், அதிகாரிகள் உணவகத்தில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani Spoiled meats Biryani Tandoori Food sales Issue Govt Officers Recover and were destroyed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->