எண்ணெய் விலை உயர்ந்தும், திருப்பூர் சூரியகாந்தி விவசாயிகளுக்கு நஷ்ட்டம்.!
Tirupur sunflower farmers suffer
திருப்பூர் மாவட்டம் : ஊத்துக்குளி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து சூரியகாந்தி விதைகள் உலக நாடுகளுக்கு ஏற்றமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சமையல் எண்ணெய் விலைகள் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து மற்ற எண்ணெய் வித்துகளில் இருந்து தயாராகும் எண்ணெய்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதனை அடுத்து, கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ சூரியகாந்தி விதைகள் 65 முதல் 73 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சராசரி விலையாக ரூ.66-க்கு விலை போனதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், விதைக்கு விலை கிடைக்கவில்லை என்றும் பெரு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விதைக்கு விலை கிடைக்காமல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Tirupur sunflower farmers suffer