தமிழகம் | மாமூல் கேட்டு அராஜகம்.! பெட்டிக்கடைக்கு தீவைப்பு.! - Seithipunal
Seithipunalதிருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி சன்னதிவீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் புதிய பொருட்கள் மற்றும் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில், இவரது கடைக்கு கடந்த ஜூன் 26-ம் தேதி திருப்பத்தூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மாமூல் கேட்டு வந்துள்ளார். 

நாகராஜ் பணம் கொடுக்க மறுத்ததால், கடையின் மீது சுபாஷ் சந்திரபோஸ் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இது குறித்து நாகராஜ் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுபாஷ் சந்திரபோசை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இவர் மீது 5 வழிப்பறி, கொலை வழக்கு, கூட்டு கொள்ளைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் சுபாஷ் சந்திர போசை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.‌
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupur mamul case


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal