உ.பி-யில் கொடூரம்; துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம்..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி இரவு 17 வயது சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர், சுவர் ஏறி குதித்து உள்ளே வந்துள்ளான். அப்போது துப்பாக்கியை காட்டி மிரட்டி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்ததால் அந்த நபர் தப்பியோடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞன் குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக கூறியதால், முதலில் புகார் அளிக்கவில்லை என்றும், மிரட்டல் தொடர்ந்ததால் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே இதே மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மற்றொரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

அதாவது, அந்த கிராமத்தில் 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தாயார் கடந்த 2019-ஆம் ஆண்டும், தந்தை 2022-ஆம் ஆண்டும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர். தனது, சித்தப்பா பராமரிப்பில் இருந்த அந்தப் பெண்ணின் வீட்டுக்கதவு திறந்திருந்ததை பார்த்த 28 வயது அண்டை வீட்டுக்காரர், உள்ளே நுழைந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அத்துமீறி நுழைதல் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Uttar Pradesh a girl was sexually assaulted after being threatened with a gun


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->