திருப்பூரில் கொரோனா சோதனை..! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் திருப்பூர் மாவட்டதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கபட்டிருந்தது. இதனால் திருப்பூரில் வேலை செய்த வெளி மாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திருப்பினர். இந்நிலையில், கடந்த மாதம் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன, இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூரை நோக்கிவர ஆரம்பித்தனர்.

தற்போது கொரோனா மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருப்பூருக்கு வந்த 18 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இதில் 32 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை தொடர்பான உதவிகளை செய்ய அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur District Make corona test For North Indian Migrate Employees


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->