கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா?
கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா?
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட தலமாகும். அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோடு பௌர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பௌர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வருகின்றனர்.

மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம். கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கி.மீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்கின்றனர்.
கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக சுவாமி கோயிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோயில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், பரமத்தி வேலூர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோயில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோயிலை வந்தடைவர்.

மனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்த வண்ணம் வரவேண்டும். காலணிகளை தவிர்த்தல் வேண்டும். வாகனங்களில் கிரிவலம் செல்லக்கூடாது. திருச்செங்கோடு மலை ஓங்கார வடிவானது. ஓங்காரம் என்பது சிவ வடிவமானது. பெரும் பலன் அத்தனையும் இந்த மலையை வலம் வருதலால் கிட்டும்.

பௌர்ணமி கிரிவலம் :
இந்த மாத பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பௌர்ணமியில் கிரிவலத்தை மேற்கொள்வது எண்ணிலடங்கா பலன்களை தரக்கூடியது.
கிரிவலத்திற்கு உகந்த நேரம் :
மாலை நேரத்தில் குறைந்த வெயிலில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு கிரிவலத்தை மேற்கொண்டால் உடல் நலமும், ஆரோக்கியமும் மேம்படும். ஆகவே, இந்த பௌர்ணமியில் குடும்பத்துடன் கிரிவலம் சென்று கடவுளின் அருளைப் பெற்றிடுங்கள்.
English Summary
tiruchengode sivan temple