திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு – நீதிமன்றம் நிபுணர் குழு நேரத்தையே ஏற்றுக்கொண்டது!
Tiruchendur Murugan Temple
திருச்செந்தூர் சுப்பிரமணியஸ்வாமி கோவிலில் குடமுழுக்கு விழா வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என கோவில் நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவராம சுப்பிரமணியன் என்ற ஒருவர், “அன்று மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்க வேண்டும்” எனக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், கோவிலுக்கான நிபுணர் குழு பரிந்துரைத்த நேரத்திலேயே குடமுழுக்கு நடைபெறலாம் எனத் தெரிவித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பாக, கோவில் விதாயகர் வாயிலாக எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Tiruchendur Murugan Temple