கல்யாண கனவுகளை நொறுக்கிய டிப்பர் லாரி...! தூத்துக்குடியில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் வசித்து வந்த ராஜன் என்பவரின் மகள் முத்துச்செல்வி (எ) முத்துமாரி (24). இவரது திருமணம் சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டு, வருகிற பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

மகிழ்ச்சியான திருமணத் தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்த நிலையில், குடும்பத்தையே உலுக்கிய துயர சம்பவம் நேற்று நிகழ்ந்தது.மேலும்,முத்துமாரி, தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த உறவினரான கலைச்செல்வன் (22) உடன், தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் பணியாற்றி வரும் தனது தந்தையை சந்திக்க பைக்கில் சென்றுள்ளார்.

கலைச்செல்வன், மணியாச்சி ஒட்டநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் ஆவார்.அப்போது, துறைமுகப் பகுதியிலிருந்து உரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக அவர்களது பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தெர்மல்நகர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tipper truck shatters wedding dreams Two killed spot Thoothukudi


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->