டிக்டாக் பிரபலம் அமெரிக்காவில் கைது.!
TikTok celebrity arrested in America
டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக உலக நாடுகளுக்கு வர்த்தகம் தொடர்பான கூடுதல்வரிகளை விதித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அதுமட்டுமல்லாமல் அதில் ஒன்றாக, அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார். இப்படி சட்டவிரோத குடியேறியவர்களை களை கண்டறியும் பணியின்போது பல்வேறு வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.லாஸ் ஏஞ்சலில் சமீபத்தில் பெரும் கலவரம் வெடித்தது,அப்போது போராடக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப்க்கு எதிராக இன்றும் போராடிவருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். இத்தாலி நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள இவர் கைதுக்குப் பின் அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வார்த்தை கூட பேசாமல் வீடியோ வெளியிட்டு வரும் இவர் கொரோனா காலகட்டத்தின் போது உலகளவில் பிரபலமடைந்தவர். 25 வயதான காபி லேம்க்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு டிக்டக்கில் மட்டும் 162 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களும் உள்ளனர்.
English Summary
TikTok celebrity arrested in America