பெண் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்! ரயில்வே போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


மங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் வெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை செல்வதற்காக ரயில்வே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏறியுள்ளார். 

பின்னர் அவர் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் ஒரு இருக்கையில் அமர்ந்தார். அதற்கான அனுமதி சீட்டையும் வைத்திருந்தார். 

ஆனால் அந்த ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் இருந்த பயண அனுமதி சீட்டை வாங்கி கொண்டு என்னிடம் கேட்காமல் எப்படி ரயிலில் ஏறலாம் என தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளார். 

மேலும் பெண் இன்ஸ்பெக்டரை ரயிலில் இருந்து உடனடியாக கீழே இறங்கு என தெரிவித்து ரயில் பெட்டியின் கதவு வரை தள்ளிச் சென்றுள்ளார். 

இதனை கவனித்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து டிக்கெட் பரிசோதகரை எச்சரித்தும் தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் இடம் தகராறில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. 

இது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் சென்னையில் உள்ள ரயில்வே போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ticket examiner dispute female inspector Railway police investigation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->