அதிரடி எச்சரிக்கை! தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!
Thunderstorm warning Chance thunderstorms many districts Tamil Nadu
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"தென்தமிழகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை சூழ்ந்துள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிவுகள் ஏற்பட உள்ளன.
இன்று (22-09-2025):
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, விழுப்புரம், கடலூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர்,கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களில் மற்றும் புதுவையிலும் கனமழை பொழியக்கூடும்.
நாளை (23-09-2025):
வடதமிழகம் முழுவதும் சில இடங்களில், தென்தமிழகம் மற்றும் புதுவை – காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24-09-2025 & 25-09-2025:
தமிழகத்தின் சில பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.
26-09-2025 & 27-09-2025:
சில இடங்களில் மிதமான மழை பொழியக்கூடும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
28-09-2025:
மீண்டும் தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை:
இன்று (22-09-2025): வானம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழியலாம். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸ், குறைந்தபட்சம் 26–27° செல்சியஸாக இருக்கும்.
நாளை (23-09-2025): ஓரளவு மேகமூட்டத்துடன் வானம் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை ஏற்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸ், குறைந்தபட்சம் 26–27° செல்சியஸ்"என்று தெரிவித்துள்ளது.
English Summary
Thunderstorm warning Chance thunderstorms many districts Tamil Nadu