கிளாமரில் அசத்தும் திஷா பாதானி..இப்படியெல்லாம் போட்டோஸ் இறக்குனா எப்படி? ரசிகர்களின் கவனம் ஈர்த்த கவர்ச்சி! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமா உலகில் கிளாமர் குயின் என்ற பெயரை பெற்றவர் நடிகை திஷா பதானி. தமிழில் கங்குவா படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதன் பிறகு பாலிவுட்டில் பல பட வாய்ப்புகளைப் பெற்றார். இவரது நடிப்பை விட கிளாமர்தான் அவரை ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

திஷா, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். தற்போது அவர் வெள்ளை நிற உடையில் எடுத்த 11 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருப்பது, ரசிகர்களை கவர்ந்துள்ளது. சிலர் அவரது கவர்ச்சி புகைப்படங்களை பாராட்டியுள்ளதோடு, சிலர் வழக்கம்போல் கமெண்ட் செக்ஷனில் கிண்டலடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் திஷா பெயர் ஒரு திடுக்கிடும் சம்பவத்திலும் வெளிப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு, அவரது வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. பின்னர் காவல்துறை நடத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், திஷாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த வாரம் அவர் கருப்பு உடையில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த வாரம் வெள்ளை உடையில் பகிர்ந்ததால், “அடுத்த வாரம் எந்த நிறம்?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

திஷா பதானியின் கிளாமரே அவரது அடையாளம் என்று சொல்லலாம். அதுவே அவருக்கு பாலிவுட் படங்களிலும், ஐபிஎல் தொடக்க விழா போன்ற பெரிய மேடைகளிலும் வாய்ப்புகளை தந்தது. தற்போது இவரை 62 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள் என்பது இவரது புகழை வெளிப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Disha Patani looks stunning in glamour how can she upload photos like this Her charm has caught the attention of fans


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->