சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
bomb thread to chennai gst office and metereological center
சமீப காலமாகவே தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கியமான இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு இன்று கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bomb thread to chennai gst office and metereological center