அஜித்தின் வீரம் பட சிறுமியை நியாபகம் இருக்கா?.. இப்போ ஹீரோயினாக மாறிட்டாங்களே..யார் தெரியுமா?
Is there a girl from Ajith movie Veeram She now become a heroine Do you know who
அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய வீரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா. அந்த படம் அஜித் கரியரில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. கோட் சூட் ஸ்டைலில் தொடர்ந்து வந்த அவர், வீரம் படத்தில்தான் வேட்டி சட்டை கட்டி வில்லங்கம் காட்டினார். சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்த படம், அப்போது வெளியான விஜய்யின் ஜில்லா படத்தைவிடவும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
அந்தப் படத்தில் சிறுமியாக நடித்த யுவினா, இப்போது ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். அவர் நடிக்கும் படம் "ரைட்". இதை அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ளார். நட்டி மற்றும் அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், ஒரு கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ளது.
வரும் செப்டம்பர் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. விழாவில் ட்ரெய்லரும் பாடல்களும் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசுகையில் –
“இந்தப்படம் என் நண்பர்களின் இணைப்பால் உருவானது. அருண் பாண்டியன் சார் வழிகாட்டுதல்கள், நட்டி சார் முழு ஆதரவு என அனைவரும் இணைந்ததால் தான் படம் முடிந்தது. அனைவரும் திரையரங்கு வந்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.
பின் நடிகை யுவினா பேசுகையில் –“சின்ன குழந்தையாக என்னை பார்த்திருப்பீர்கள். இப்போது காலேஜ் பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை தந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. நட்டி சாருக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்,” எனக் கூறினார். குழந்தை நட்சத்திரத்திலிருந்து ஹீரோயினாக வளர்ந்த யுவினாவின் "ரைட்", ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
English Summary
Is there a girl from Ajith movie Veeram She now become a heroine Do you know who