கமலுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம்!
Thug Life Tamil Kannadam Kamal
நடிகர் கமல்ஹாசன், "தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது" என்ற கருத்து தெரிவித்திருந்தது கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘தக் லைஃப்’ திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் அவரால் கூறப்பட்ட இந்த உரை, பலர் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கமலிடம் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கோர வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மன்னிப்பு கிடைக்காவிட்டால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பேனர்கள் கிழித்து போராட்டம் நடத்தும் அளவுக்கு கண்டனம் தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக கமல், “நான் கூறியது வரலாற்று உண்மைதான். அதில் தவறு எதுவும் இல்லை. அரசியல் கோணத்தில் இது விரிவாகிறது. எனது அன்பு கர்நாடக மக்களுக்கு நன்றியும், புரிதலும் இருக்கிறது” என தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் கமல் பேசியது உண்மைதான் என்று சீமான் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
English Summary
Thug Life Tamil Kannadam Kamal