விஜயை தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! 3 மாசமா ரொம்ப டார்ச்சர் பண்றாங்க - காவல் நிலையத்தில் வைஷ்ணவி புகார்!
Throw Vijay in jail sir They have been torturing him for 3 months Vaishnavi complains at the police station
தமிழகத்தில் வேகமாக வளர்ந்துவரும் அரசியல் இயக்கமாகும் தமிழக வெற்றி கழகம் (தவெக) இப்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய இந்த கட்சியின் Virtual Warriors என்று அழைக்கப்படும் சமூக வலைத்தள அணியினர், தனிப்பட்ட முறையில் பெண்கள் மீது அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்க்கே நேரடியாக புகார் மனு அளித்துள்ளார் இளம் பெண் வைஷ்ணவி. இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் ஆன வைஷ்ணவி, விஜய் தொடங்கிய தவெக கட்சியில் தொடக்கத்தில் இணைந்து கட்சி பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால், கட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் அதிலிருந்து விலகி, தற்போது திமுகவில் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை நேரில் சென்ற வைஷ்ணவி, தன்மீது தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் தாக்குதல்கள் குறித்து புகார் மனு அளித்துள்ளார்.
புகார் விவரம்:
-
தவெகவின் "Virtual Warriors" எனப்படும் சமூக வலைதள அணியினர், தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
-
தனது குடும்பத்தினரையும் இலக்காக்கி அவதூறான பதிவுகள் பகிரப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது கடந்த மூன்று மாதங்களாக தொடர்வதாகவும் கூறியுள்ளார்.
-
இந்த நடவடிக்கைகளுக்கு கட்சி தலைவர் விஜய் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
-
அவர் கூறியதாவது:“விஜய் குறைந்தது கண்டன அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடந்ததே இல்லை.”
போலீசில் புகார் அளிக்க வேண்டிய நிலைக்கு வந்தது ஏன்?
வைஷ்ணவி தனது மனுவில், பத்திரமான அரசியல் சூழல் பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றதும், இளம் பெண்கள் அரசியலுக்குள் வர வேண்டும் என்றொரு பெரியாரிய கோஷத்தை, தவெகவினர் ஆண்கள் மையமாக மாற்றி பெண்களை தவிர்த்து விடும் சூழலை உருவாக்கி வருவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கூற்றில்“வீட்டிலிருக்கும் பெண்களிடம் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். ஆனால் இப்போது இவர்கள் செய்யும் செயல்கள், பெண்களை மீண்டும் வீட்டுக்குள்ளேயே முடக்கிவைக்கின்றன.”
இந்த புகாரால், விஜய் தலைமையிலான தவெக கட்சியில் உள்ள சமூக வலைதள அணியின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள் தீவிரமாகியுள்ளன. வைஷ்ணவியின் புகார் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது. மேலும், காவல் துறை இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
English Summary
Throw Vijay in jail sir They have been torturing him for 3 months Vaishnavi complains at the police station