சேலம்.! அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் இருந்து 2 ஆயிரம் இளநீர் காய்களை ஏற்றிக் கொண்டு தன்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று அதிகாலை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் லாரியில் இருந்த இளநீர் காய்களும் சாலையில் சிதறி உள்ளது.

இதைத்தொடர்ந்து பெருந்துறையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற சிமெண்ட் பல்கர் லாரி விபத்து நடந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற சொகுசு பேருந்து பல்கர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் சாலையில் சிதறிக் கிடந்த இளநீர் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three vehicles collided in salem


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->