பட்டினி போராட்டம் நடத்துவதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள்.! - Seithipunal
Seithipunal


பட்டினி போராட்டம் நடத்துவதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய குழந்தைகள்.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கனிமவளங்களை தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இதனை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கனிமவளங்கள் எடுத்து செல்வதை தடுப்பதற்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், கீழகடையம் ஊராட்சித் தலைவர் பூமிநாத்தின் மகன் அஸ்வின் சுபநாத், பூமிநாத்தின் சகோதரர் சந்திரசேகரின் மகள்களான சுப பிரியங்கா மற்றும் சபிதா உள்ளிட்ட மூவரும், போராட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விவரம் கேட்டுள்ளனர். 

அதன் படி பெற்றோர்களும் போராட்டங்கள் குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குழந்தைகள் மூன்று பேரும் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். 

அந்த கடிதத்தில் கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்தாவிட்டால், வருகிற பதினான்காம் தேதி, கடையம் சின்னத்தேர் திடலில், பட்டினிப் போராட்டம் நடத்துவோம் என்றுத் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three students write letter to cm stalin for strike in tenkasi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->