ராசிபுரத்தில் பரபரப்பு || வீட்டில் வெடித்து சிதறிய பட்டாசு - குடும்பத்தினரின் நிலை என்ன?
three peoples injured for firecrackers explossion in rasipuram
ராசிபுரத்தில் பரபரப்பு || வீட்டில் வெடித்து சிதறிய பட்டாசு - குடும்பத்தினரின் நிலை என்ன?
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் வி.நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அனுமதியில்லாமல் வீட்டிலேயே பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவரது வீட்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர், வீட்டில் சிக்கித் தவித்த கண்ணன் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர்.
இதில், கண்ணன், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளிட்ட அனைவரும் தீக்காயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தினால், சுற்றுவட்டார குடியிருப்பில் இருந்து அனைத்து மக்களும் வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும், அப்பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த வெடி விபத்து நடைபெற்ற வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் உமா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples injured for firecrackers explossion in rasipuram