திறந்த 4-வது நாளில் 3 பேரின் உயிரை பறித்த ஜி.டி.நாயுடு மேம்பாலம் - கோவையில் அதிர்ச்சி.!!
three peoples died for accident in covai g d naidu bridge
கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ.1,791 கோடி மதிப்பில் மிக நீளமான மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் தமிழ்நாட்டின் முதல் நீண்ட மேம்பாலம் ஆகும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ந்தேதி திறந்து வைத்தார். இந்த புதிய மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட் வின்ஸ் பகுதிக்கு பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் கார் லாரிக்கு அடியில் புகுந்து நொறுங்கியது.

இந்த விபத்து குறித்து சக வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் படி விரைந்து சென்ற போலீசார் 1 மணி நேரம் போராடி லாரிக்கு அடியில் இருந்த மூன்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திறந்த நான்கு நாளில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died for accident in covai g d naidu bridge