வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டிய இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் உள்ள கொடைக்கான‌ல் வத்தலக்குண்டு சாலையில் வ‌ட‌க‌ரைப்பாறை என்ற ப‌ழ‌ங்குடி கிராம‌ம் ஒன்று உள்ள‌து. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் சந்தன மரங்கள் ஏராளமாக உள்ளன. 

இந்த நிலையில், இந்த பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் தொடர்ந்து சந்தன மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல்கள் தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர், வ‌ன‌ப்ப‌குதிக்குள் ரோந்துப்ப‌ணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணியில் வடகரபாறை அருகே வசித்து வரும் ஆதிவாசி மக்களையும் வனக்குழுவினராக ஈடுபடுத்தினர்.

அப்போது, வடகறைபாறை வ‌ன‌ப்ப‌குதிக்குள் மர‌ம் வெட்டும் ச‌த்த‌ம் கேட்டது. உடனே ஆதிவாசி மக்களை கொண்ட ரோந்துப்ப‌ணி வனக் குழுவினரும், வனத்துறையினரும் மரம் வெட்டும் பகுதிக்கு அருகில் சென்று பார்த்தனர்.

அங்கு, இர‌ண்டு பெண்க‌ள் உள்பட மூன்று ந‌ப‌ர்க‌ள் அங்குள்ள ச‌ந்த‌ன‌ ம‌ர‌ங்களை வெட்டியது தெரிய‌வ‌ந்த‌து. அதன் பின்னர் ஆதிவாசி மக்களை கொண்ட வனக் குழுவினர் மூன்று பேரையும் ம‌ட‌க்கிப்பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

அதன் பின்னர் அவர்களிடமிருந்து வெட்டப்பட்ட ச‌ந்த‌ன‌ மரக்கட்டைகளை வனத்துறையினர் ப‌றிமுத‌ல் செய்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை வ‌ன‌த்துறை அலுவ‌ல‌க‌த்துக்கு அழைத்து வ‌ந்து விசார‌ணை மேற்கொண்டன‌ர்.

அந்த விசாரணையில், அவர்கள் தேவ‌தான‌ப்ப‌ட்டியை சேர்ந்த‌வர்கள் என்ப‌து தெரிய‌வந்தது. அவர்களிடமிருந்து ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின் ம‌திப்புக‌ளை வனத்துறையினர் ம‌திப்பிட்டு அவர்களிடம் விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for Sandal tree cut in forest area


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->