நாமக்கல் || ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி பலி.! தாய் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
three peoples addmited hospital for eating food in private hotel
ஹோட்டலில் உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி பலி.! தாய் உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில் அனுமதி.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏ.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் தவக்குமார். இவருடைய மனைவி சுஜாதா. இவர்களுக்கு கலையரசி, பூபதி என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதில், சுஜாதா கடந்த 16ஆம் தேதி இரவு தனது பிள்ளைகள் மற்றும் அண்ணன் சினோஜ், அண்ணி கவிதா ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுஜாதா கலையரசிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், மாணவியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட அவரது தாய், மாமா மற்றும் அத்தை உள்ளிட்டோரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
three peoples addmited hospital for eating food in private hotel