வீட்டிற்குள் நுழைந்த மிளா தாக்கி 3 வனத்துறையினர் படுகாயம்.!!
three forest department officers injured for attack mila in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது வீட்டின் சமையல் அறையில் ஒரு விலங்கு ஒன்று நின்றுள்ளது. இதை பார்த்து பயந்துபோன இப்ராகிம் மனைவி அது பசு மாடு என்று நினைத்து அதனை விரட்டுவதற்காக அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்தார்.
அவர்கள் வந்து பார்த்தபோது தான், வீட்டிற்குள் நிற்பது மிளா என்பது தெரியவந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதனை வீட்டை விட்டு விரட்ட முயன்ற போது அந்த விலங்கு வெளியில் செல்லாமல், அங்குமிங்கும் ஓடியதில் அங்கிருந்த பொருட்கள் சிதறின.
பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் விரைந்து வந்து, மிளாவை பிடிக்க முயன்றனர். அப்போது, மிளா காலால் தாக்கியதில் வனத்துறை ஊழியர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர், 1 மணிநேரம் போராடி வலையை போட்டு மிளாவை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
three forest department officers injured for attack mila in kanniyakumari