விடுதலை போராட்ட வீராங்கனை திருமதி.பிகாஜி காமா அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


விடுதலை போராட்ட வீராங்கனை திருமதி.பிகாஜி காமா அவர்கள் பிறந்ததினம்!.

இந்திய கொடியை வெளிநாட்டு மண்ணில் முதன் முதலில் ஏற்றிய விடுதலை போராட்ட வீராங்கனை திருமதி.பிகாஜி காமா அவர்கள் பிறந்ததினம்!.

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும், பெண் சுதந்திரம் மற்றும் வாக்குரிமைக்காக குரல் கொடுத்தவருமான பிகாஜி ருஸ்தம் காமா 1861ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி மும்பையில்; பிறந்தார்.

 1907-ல் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் இந்திய சுதந்திரக் கொடி வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

இவர் இந்த மாநாட்டில் இந்தியாவில் மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் பிரிட்டிஷிடமிருந்து சுயாட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தார். பெண்ணுரிமை, பெண்களுக்கு வாக்குரிமை ஆகியவற்றுக்காகப் போராடினார். தனது சொத்துகளில் பெரும் பகுதியை சிறுமிகளுக்கான ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு எழுதி வைத்தார்.

 இந்தியாவில் பல நகரங்கள், தெருக்கள், பொது அமைப்புகளுக்கு பிகாஜி காமா அல்லது மேடம் காமா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. 

வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பிகாஜி காமா 1936-ல்  ஆகஸ்ட் 13 ஆம் தேதி தனது 74-வது வயதில் காலமானார்.


சோழமண்டல மன்னன், தஞ்சாவூர் அரசர் திரு.இரண்டாம் சரபோஜி அவர்கள் பிறந்ததினம்!.

 இரண்டாம் சரபோஜி  (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.இரண்டாம் சரபோஜி அனைத்து தரப்பட்ட மக்களையும் தன் நண்பர்களாக கொண்டிருந்தார்.

 ஒரு முறை தன் நாட்டில் பயணம் மேற்க்கொள்ளும் போது பெரும் மதிப்பு கொண்ட நாணயத்திற்க்கு சில்லரை யாரிடம் கிடைக்குமென விசாரித்ததில் காடுவெட்டிவிடுதி என்ற ஊரில் சு. சா. சுப்பஞ் செட்டியார் முன்னோரான முருகன் செட்டியாரிடம் இருக்குமென அறிந்து செட்டியாரின் இல்லத்தில் நேரடியாக விஜயம் செய்து நட்புக்கொண்டார் பின் செட்டியார் அரண்மனை வரும் போது பல்லாக்கில் வர வேண்டுமென பல்லாக்கையும் அதை தூக்க ஆண்களையும் நியமித்து வந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The birthday of the freedom fighter Ms Pikaji Kama


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->