பாஜக அலுவலகத்திற்கு தீ வாய்ப்பு - லடாக்கில் பயங்கரம்.!!
fire to bjp office in ladakh
கடந்த பத்தாம் தேதி முதல் யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையறிந்த மத்திய அரசு இந்தப் போராட்டம் தொடர்பாக அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் படி, இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
English Summary
fire to bjp office in ladakh