தவெக தரப்பில் ‘ஆபரேஷன் சைலன்ஸ்’! மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா..கோடிகளில் எகிறும் சமாதான தூது?
Operation Silence from Tvk Donot speak in the media Is the music being blocked A message of peace that is being sold in crores
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்போது அதிகமாக பேசப்படும் விஷயமாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் குடும்ப வாழ்க்கை விவகாரம் மாறியுள்ளது. அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீதா தரப்பில் இருந்து இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் அதை தவெக தரப்பு தடுக்க முயன்றதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
கிடைத்த தகவல்களின் படி, தனது விவாகரத்து மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தனக்கான நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறுவதற்காக சங்கீதா ஊடகங்களை சந்திக்கத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய்யின் அரசியல் வட்டாரத்துக்கு சென்றதும், உடனடியாக சமரச முயற்சிகள் தொடங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி அமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் நிலையில், குடும்ப விவகாரம் பொதுவெளியில் பெரிய விவாதமாக மாறினால் அது கட்சியின் இமேஜை பாதிக்கக்கூடும் என்ற கவலை தவெக வட்டாரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சில முக்கிய நிர்வாகிகள் சங்கீதா தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, ஜீவனாம்சத் தொகை மற்றும் மாதாந்திர வாழ்க்கைச் செலவுக்கான தொகையை அதிகரிக்க விஜய் தரப்பு சம்மதம் தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், விவகாரம் மேலும் பெரிதாகாமல் தடுக்க வேண்டும் என்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவிலும் சில முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாகவும், அது 2021 ஏப்ரல் மாதத்தில் தான் அறிந்ததாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல் தெரிந்த பிறகும் அந்த உறவை முடிக்காமல் தொடர்ந்ததாகவும், இதனால் தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் சங்கீதா கூறியுள்ளார்.
மேலும் அந்த உறவை பற்றி கேள்வி எழுப்பியதற்குப் பிறகு வீட்டில் தனது உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், தனியாக வாழும் நிலை உருவாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நடிகையுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது தன்னையும் தனது குழந்தைகளையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் அந்த நடிகையை வழக்கில் இரண்டாவது எதிர்மனுதாரராக சேர்க்க தயார் என்றும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் லண்டனில் தனது குடும்ப தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் சங்கீதா, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது குறித்து அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் எந்த திசையில் நகரும் என்பது குறித்து அனைவரும் கவனித்து வருகின்றனர்.
English Summary
Operation Silence from Tvk Donot speak in the media Is the music being blocked A message of peace that is being sold in crores