ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில் தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு.!
tvk secretaries petition to ranipetai sp office for tvk election campaign
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தற்போது முதலே தொடங்கி விட்டன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார்.

டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ள விஜய் கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து அவர் கரூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வரும் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களை சந்தித்து பிரசாரம் நடத்த உள்ளார். இதனை முன்னிட்டு பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து பரிசீலனை செய்யப்பட்டு எஸ்.பி. அலுவலகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
tvk secretaries petition to ranipetai sp office for tvk election campaign