அதிமுக எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 03 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு..!
Three Bavaria robbers convicted in AIADMK MLA murder case
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளையர்கள் 03 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில், 1995 முதல் 2005 வரை, பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்தோர் பெரும் அட்டூழியம் செய்தனர். இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த சுதர்சன் உட்பட, 13 பேரை கொலை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த பாவாரியா கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதோடு, ஐ.ஜி.,யாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்தார். இந்த தனிப்படை போலீசார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் முகாமிட்டு, பவாரியா கொள்ளையர்கள் 13 பேரை கைது செய்தனர்.அத்துடன், உ.பி.,யில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த பவாரியா கொள்ளையர்கள் 13 பேரில், நால்வருக்கு விசாரணை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. பின், சென்னை உயர் நீதிமன்றம், அதை ஆயுள் தண்டனையாக குறைத்தது. குறித்த நால்வரில் பவாரியா கொள்ளை கும்பல் தலைவனான ஓமா, வேலுார் சிறையில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டான். மற்றொருவனும் சிறையிலேயே இறந்தவிட்டான். மற்ற மூவர், தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில், ஏனைய ஒன்பது பேர் ஜாமினில் வெளியே சென்றுள்ளனர்.
இந்நிலையில் சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மற்றொரு குற்றவாளியான ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24-ஆம் தேதி உத்தரவிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
English Summary
Three Bavaria robbers convicted in AIADMK MLA murder case