அஇஅதிமுக-வின் ரிப்போர்ட், Data திருட்டு... பச்சைக் கோழைத்தனம்... திமுக-வின் தேர்தல் தோல்வி பயம்? அதிமுக கண்டனம்!
DMK VS ADMK Police case chennai election 2026
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "விடியா திமுக அரசின் காவல்துறையால் நேற்று மதியம் அலுவலகத்திற்குள் புகுந்து, விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட அஇஅதிமுக ஆதரவு சமூக மேலாண்மை நிறுவனமான பிரமான்யா-வைச் சார்ந்த ஹரி மற்றும் சாய், நேற்று இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்திருந்து அலைக்கழித்து வந்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பயத்தில் பொய் வழக்கு பதிந்து, அஇஅதிமுக-வின் செயல்பாடுகளை முடக்கத் துடிக்கும் திமுகவின் கீழ்த்தரமான அரசியலை, அனைத்து நிலைகளிலும் எதிர்கொண்டு அதிமுக முறியடிக்கும்!
2000 கிலோ மெத் போதைப் பொருளுக்கான மூலப்பொருளுடன் கையும் களவுமாக விமான நிலையத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம் சிக்கிய திமுக அயலக அணியில் இருந்த ஜாபர் சாதிக் எனும் சர்வதேச போதைப்பொருள் மாபியா தலைவனை அரவணைத்து, அரசியல் அடையாளம் கொடுத்த பொம்மை முதல்வர் ஸ்டாலினின் திமுக, தங்கள் வெள்ளைக் கரையை மறைக்க, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையை அதன் பணியை செய்ய விடாமல், தங்கள் அரசியல் பழிக்கணக்கைத் தீர்த்துக் கொள்ளும் ஏவல்துறையாக மாற்றியிருப்பது பச்சைக் கோழைத்தனம்.
போதைப் பொருள், பணம் போன்ற உருட்டுகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? திமுக அரசு பிரமான்யா அலுவலகத்திற்குள் நுழைய வேண்டிய உண்மைக் காரணம் என்ன?
அஇஅதிமுக-வின் பூத் வாரியான ரிப்போர்ட்கள் உள்ளிட்ட முக்கியமான Data-வை திருட வேண்டிய நிலைக்கு முற்றிவிட்டதா திமுக-வின் தேர்தல் தோல்வி பயம்?
2026-ல் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், முதல் வேலையாக, திமுக-வின் அத்தனை வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறும், பாத்துக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
DMK VS ADMK Police case chennai election 2026