கோவில்பட்டியில் தாய்-மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்.. நெருக்கடியால் அவமானத்திற்கு பயந்து தற்கொலை.!
Thoothukudi Kovilpatti Mother Daughter Mystery Death Issue Affair Ends Suicide
கோவில்பட்டியில் தாய் - மகள் குளிர்பானம் குடித்ததில் இறந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், பேரதிர்ச்சி தகவலாக கள்ளகாதலனின் வற்புறுத்தல் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் வசித்து வருபவர் இளங்கோ. இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், சண்முகபாண்டி, தர்ஷ்னி என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இரவு கற்பகம் மற்றும் அவரது மகள் அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார்.
பின்னர், வீட்டருகே உள்ள பெட்டி கடையில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். இதனையடுத்து, சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தாய் - மகள் உயிரிழந்த விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்ட தாய் - மகள், குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பது காவல் துறையினர் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகமடடைந்து கற்பகத்தின் அலைபேசியை ஆய்வு செய்கையில், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தீன பெருமாள் என்ற வாலிபர் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கற்பகத்திற்கும் - தீன பெருமாளுக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இதனை புகைப்படமாகவும் எடுத்துள்ளனர். இந்நிலையில், கற்பகத்தை தன்னுடன் சேர்ந்து வாழ தீன பெருமாள் வற்புறுத்தவே, அதற்கு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தீன பெருமாள் நீ என்னுடன் வாழவில்லை என்றால், நாம் எடுத்த புகைப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிடுவேன் என மிரட்டி இருக்கிறான். இதனால் அவமானத்திற்கு பயந்து பெண்மணி தற்கொலை முடிவெடுத்துள்ள நிலையில், மகளின் நிலை என்னவாகும் என எண்ணி, அவரையும் விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து தற்கொலை செய்திருக்கின்றனர்.
இதுதொடர்பான தொடர் விசாரணை காவல் துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thoothukudi Kovilpatti Mother Daughter Mystery Death Issue Affair Ends Suicide