ககக போ டெக்னீக்கில் களமிறங்கிய கொள்ளையர்கள்.. தட்டி உடைத்து தூக்கப்பட்ட பாட்டில்கள்.! - Seithipunal
Seithipunal


அரசு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபானத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு நேற்று நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள், இரும்பு கம்பியால் மதுபான கடையின் கதவை உடைத்து இருக்கின்றனர். 

பின்னர், மதுபானங்களை திருடி சென்ற நிலையில், இன்று காலை டாஸ்மாக் ஊழியர் கடைக்கு வருகையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபானங்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த நன்னிலம் காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருவாரூர் காட்டூர் பகுதியில், கடந்த மாதம் 20 ஆம் தேதி ரூ.1 இலட்சம் மதிப்பிலான மதுபான பொருட்கள் திருடப்பட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த விஷயம் தொடர்பான கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Nannilam Wine Shop Robbery Liquor Alcohol Bottle Stolen 19 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal