#திருவாரூர் : பெண் போலிஸ் அடித்ததால்.. அவமானம் தாங்காமல் இளைஞர் தற்கொலை.!
Thiruvarur men suicide for Police Investigation
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மடப்புரம் கிராமத்தில் ராஜா என்ற கூலி தொழிலாளிக்கு ராகுல்ராஜ் என்ற 22 வயது மகன் இருந்துள்ளார். இந்த ராகுல்ராஜ் அதே பகுதியில் இருக்கும் ஒரு 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் ராகுல் ராஜை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்த காவல்துறையினர் அவரை அடித்துள்ளனர். விசாரணை முடிந்து வீட்டிற்கு நேற்று இரவு ராகுல்ராஜ் வந்த நிலையில் தன்னை போலீசார் அடித்து விட்ட காரணத்தால் அவமானமடைந்து வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.

இது குறித்து தெரிந்து கொண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராகுல் ராஜ் உயிரிழந்து விட்டார். இந்த விஷயம் குறித்து அவரது உறவினர்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு புகுந்து நியாயம் கேட்டனர்.
மேலும், அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மீது ராகுல் ராஜின் தந்தை ராஜா புகார் கொடுத்தார். அதில், "பெண் வீட்டினரிடம் 5000 பணத்தை பெற்றுக் கொண்டு மகளிர் போலீசார் தனது மகனை அடித்து அவமானப்படுத்தியதாகவும் பெண் போலீஸ் அடித்ததால் அந்த அவமானம் தாங்க முடியாமல் அவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டான்." என்றும் புகார் கொடுத்துள்ளார்.
English Summary
Thiruvarur men suicide for Police Investigation