2011 கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து: ஆயுள் தண்டனை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்!
Madras HC Overturns Acquittal Life Term for 9 in 2011 Tiruvannamalai Murder
திருவண்ணாமலையில் 2011-ல் அரங்கேறிய கொடூர கொலை வழக்கில், கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 9 பேருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவப் பின்னணி:
தாக்குதல்: திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது மகன் ரமேஷ் ஆகியோர் கடந்த 2011 ஏப்ரல் 25-ல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுத் திரும்பும்போது, தென்றல் நகர் அருகே 9 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டனர்.
பலி: பணத் தகராறு காரணமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; தந்தை ஏழுமலை படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த கொலை வழக்கில் ரவிச்சந்திரன், தேவதாஸ், அம்புரோஸ் உட்பட 9 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 9 பேரையும் விடுவித்தது.
மேல்முறையீடு: இதனை எதிர்த்துத் தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு:
நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு இந்த வழக்கில் அதிரடித் தீர்ப்பை வழங்கியது:
தண்டனை: "குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்த நீதிபதிகள், கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து 9 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹1,000 அபராதம் விதித்தனர்.
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 90 நாட்களுக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Madras HC Overturns Acquittal Life Term for 9 in 2011 Tiruvannamalai Murder