இறைநம்பிக்கையின் புனித பயணம் ஆரம்பம்: ரம்ஜான் நோன்பை வரவேற்ற தமிழகம்...!
holy journey faith begins Tamil Nadu welcomes fasting Ramzan
ஒவ்வொரு ஆண்டும் புனித ரம்ஜான் மாதம் வந்தாலே, உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை ஆன்மிக உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது ரம்ஜான் நோன்பு ஆகும். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, பிறைத் தென்பட்டதன் அடிப்படையிலேயே நோன்பு தொடங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு ரம்ஜான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹியித்தின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தினர் நோன்பை கடைப்பிடித்து, பக்தி வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கினர்.பள்ளிவாசல்களில் நடைபெற்ற தராவீஹ் சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு இறை அருளைப் பெற பிரார்த்தனை செய்தனர்.
அதிலும் குறிப்பாக சென்னை அமைந்தகரையில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் அதிகாலை முதலே திரண்ட மக்கள், சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆன்மிக சூழலை உருவாக்கினர். மாநிலம் முழுவதும் பக்தியும் ஒற்றுமையும் நிறைந்த ரம்ஜான் மாதம் இன்று உற்சாகமாகத் தொடங்கியுள்ளது.
English Summary
holy journey faith begins Tamil Nadu welcomes fasting Ramzan