சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் திருப்பம்: 41 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு தந்திரிக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்...!
Turnaround Sabarimala gold robbery case Court grants bail Tantri after 41 days jail
சபரிமலை ஐயப்பன் கோவில் வளாகத்தில் துவார பாலகர் சிலை மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான இரு வழக்குகளில், தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 41 நாட்களாக சிறையில் இருந்த அவருக்கு தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நெஞ்சு வலி காரணமாக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் சிறைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், அவரது ஜாமின் மனு கொல்லம் குற்றவியல் நீதிமன்றம்யில் விசாரணைக்கு வந்தது. தந்திரி தரப்பில், தங்கம் கொள்ளை சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், சிறையில் இருப்பதால் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், வாதங்களை பரிசீலித்த நீதிபதி, தந்திரிக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை சிறப்பு விசாரணைக் குழு சமர்ப்பிக்கவில்லை எனக் குறிப்பிட்டு, அனைத்து வழக்குகளிலும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இதே வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து பேருக்கும் ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Turnaround Sabarimala gold robbery case Court grants bail Tantri after 41 days jail