காதலன் வீட்டு முன்பு தர்ணா.. போராட்டம் நடத்தி காதலனை கரம்பிடித்த பெண்மணி.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அண்ணாநகர் பகுதியை சார்ந்தவர் சங்கர். இவரது மகள் ராம் பிரியா (வயது 20). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் தங்கராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 29). இவர் எஞ்சினியரிங் படித்துள்ள நிலையில், பெயிண்டராக பணியாற்றி வருகிறார். 

விக்னேஷும், ராம் பிரியாவும் காதலித்து வந்த நிலையில், இருவரின் காதலிற்கும் பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ராம் பிரியாவின் தந்தை, தனது மகளுக்கு வேதாரணயம் பகுதியை சார்ந்த வாலிபருடன் திருமண நிச்சயம் செய்துள்ளார். 

இதனையடுத்து ராம் பிரியாவிற்கு வரும் 25 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக விக்னேஷ் தனது காதலியின் இல்லத்திற்கு சென்று தன்னை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், மீறினால் நாம் தனிமையில் எடுத்த புகைப்படத்தை வருங்கால கணவரிடம் காண்பித்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன பெண்மணி செய்வதறியாது, தனது காதலரின் இல்லத்திற்கு செல்லவே, விக்னேஷின் குடும்பத்தினர் வீட்டினை பூட்டிவிட்டு வேறொரு ஊருக்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த ராம் பிரியா, அங்குள்ள திருத்துறைப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பின்னர் விக்னேஷின் பூட்டியிருந்த வீட்டிற்கு முன்னிலையில் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவரவே, இருதரப்பையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில் காதலன், காதலியை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Love girl Protest and Married Love Boy


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal