13 வயது மாற்றுத்திறனாளி மகளை.. பலாத்காரம் செய்த தந்தை.. உறவினர்களுடன் சேர்ந்து அட்டகாசம்.!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஹரித்வாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான கார்த்திக் என்பவரின் மனைவி குடும்ப பிரச்சினையால் வீட்டை விட்டு சென்று விட்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இதில் இரண்டு குழந்தைகள் பெண் குழந்தைகள். 

இதில் மூத்த மகள் காவியா (வயது 13) என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி. இந்த பெண்ணை கார்த்திக் அன்றாடம் குறித்து விட்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட உறவினர்களான சுதாகர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சிறுமியை மிரட்டி தாங்களும் பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்தனர். 

இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் சிறுமிக்கு நடந்த கொடுமைகளை திருவாரூரில் உள்ள சமூக குழந்தைகள் நலன் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சமூக குழந்தைகள் நல பாதுகாப்பு மைய அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் குற்றம் உறுதியானது. 

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமுறைவாக இருக்கும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvarur Father Raped Own daughter


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->