தி.மலை கோயில் வளாக ஆக்கிரமிப்புகள்: உடனடி அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!
Thiruvannamalai Chennai High court Tamil Nadu GOVT
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலையில் சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் நீர்நிலைகள் மீது ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதிகள், கோவில் வளாகத்தில் உள்ள தாமரை குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என கடும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை 46 வாரங்களாக அதிகாரிகள் கண்டறிந்திருந்தும், இதுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் கண்டித்தனர்.
மேலும், தாமரை குளம் மற்றும் சுற்றுவட்டம் தொடர்பான அகற்ற நடவடிக்கைகளை மேற்பார்வையிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை கண்காணிப்பாளராக நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Thiruvannamalai Chennai High court Tamil Nadu GOVT