இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை.! கொந்தளிப்பில் உறவினர்கள்.! மருத்துவமனை இழுத்து மூடல்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருகே கர்ப்பப்பையில் உள்ள நீர் கட்டியை அகற்றும் போது, தவறான ஒரு சிகிச்சை அளித்ததால், இளம் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியது.

திருவண்ணாமலை மாவட்டம், ரங்கப்பணுர் கிராமத்தில் சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி ராஜகுமாரி. இவருக்கு வயது முப்பத்தி ஒன்பது ஆகிறது. இவருக்கு கருப்பையில் நீர்க்கட்டி இருந்த காரணத்தினால் இவர் திருவண்ணாமலையில் உள்ள ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு லேப்ரோஸ்கோபி மூலம் கர்ப்பப்பையில் உள்ள நீர் கட்டியை அகற்றும் சிகிச்சை நடைபெற்றது. இதில் அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி ராஜ் மருத்துவமனை முன்பு அவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், "ராஜ்குமாரின் வயிற்றுப் பகுதியில் இரண்டு துளைகள் இட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திடீரென இதயம் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கதிரவன் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆவார்அவருக்கு உயர் சிகிச்சை தேவை என்று கூறி ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரின் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவறான சிகிச்சையின் காரணமாக தான் ராஜ்குமாரின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த மருத்துவமனைக்கு ஆதரவாக முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதால் எங்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் நீதி கேட்டு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை மீதும், அந்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று போராட்டக்காரர்கள் ஒருவர் காவல்துறையினரிடம் முறையிட்டார்.

போராட்டம் காரணமாக மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்சியை சேர்ந்த சிலரும் இளம்பெண்ணின் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை நாங்கள் உங்களுக்கு உறுதியாக இருப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvannamalai lady wrong operation


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal