திருவண்ணாமலை | மனைவி, 4 குழந்தைகளை கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்த கொடூரன் - தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தின் பின்னணி! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை : கஞ்சா போதையில் மனைவி மற்றும் தன் நான்கு குழந்தைகளை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து கொடூரன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கீழ்க்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான பழனி, செங்கத்தை அடுத்த ஓரந்தவாடி மோட்டூர் கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். 

பழனிக்கு மனைவி, 5 பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை இருந்தனர். முதல் மகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் மோட்டூர் கிராமத்தில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் 5 குழந்தைகளை சரமாரியாக கொடுவாளால் வெட்டிய பழனி, தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த கொடூர சமபவத்தில் பழனி, அவரின் மனைவி, 4 குழந்தைகளும் உயிரிழந்தன. ஒரு குழந்தை மட்டும் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னால் கஞ்சா போதை பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சனை மற்றும் கடன் சுமையால் சில மாதங்களுக்கு முன் பழனி கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

கஞ்சாவுக்கு அடிமையானதால், அவரது குடும்பத்தில் முற்றிலுமாக அமைதி குலைந்த நிலையில், நேற்று அதிகாலையில் உறக்கத்தில் இருந்த மனைவியையும், குழந்தையையும் கொடூரமாக பழனி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai family murder case Ganaja Issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->