கடன் கொடுத்தவருக்கு, கள்ளக்காதலனுடன் சேர்ந்து சொர்க்கம் காண்பித்த பெண்.. அரங்கேறிய கொடூர செயல்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பொன்முடி கிராமத்தை சார்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நவநீதியம்மாள் (வயது 55). பொன்முடி அங்குள்ள மேட்டுகாலனி பகுதியை சார்ந்த பெண்மணிக்கு செலவிற்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளார். கடந்த 28 ஆம் தேதியன்று நவநீதியம்மாள், சிவகாமியிடம் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 

இதன்பின்னர் வீட்டிற்கு நவநீதியம்மாள் திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரை எங்கு தேடியும் காணவில்லை என்பதால் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். காவல்துறையினரின் விசாரணையில் நவநீதியம்மாள் நிலை குறித்த தகவல் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதியன்று அங்குள்ள தேக்குத்தோப்பு பகுதியில் பெண்ணொருவரின் பிணம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி காவல்துறையினர், பிணமாக கிடப்பது மாயமான நவநீதியம்மாள் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

பின்னர் நவநீதியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கு விசாரணையில் சந்தேகத்தின் கீழ் சிவகாமியின் இல்லத்திற்கு செல்லவே, அவர் ஆந்திரப்பிரதேசம் நாயுடுபேட்டை பகுதியை சார்ந்த வாலிபர் சுரேஷுடன் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.

இதன்பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலைக்கான மர்மம் விளங்கியுள்ளது. நவநீதியம்மாளின் கணவர் சீனிவாசன் கடனாக கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்க இயலாததால், சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த நவநீதியம்மாளை கொலை செய்ததும், கொலையை மறைக்க நகையை கொள்ளையடித்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Thiruttani girl murder police arrest culprits


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal