தந்தையிடமே கஞ்சா அடிக்க பணம் கேட்ட மகன்.. தந்தையின் பரபரப்பு செயல்.! - Seithipunal
Seithipunal


கஞ்சா மற்றும் மது அருந்த பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்த மகனை, கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி மாப்பு சாலை பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் பழனி. இவரது மகன் கோகுல். இவர் கடந்த சில வருடங்களாக மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதாக தெரியவருகிறது. 

இதற்காக வீட்டில் அவ்வப்போது திருடியும் மது மற்றும் கஞ்சா வாங்கி அருந்தி வந்த நிலையில், சம்பவத்தன்று மது மற்றும் கஞ்சா வாங்க தந்தையிடமே பணத்தை கேட்டு கோகுல் தொந்தரவு செய்துள்ளார். மேலும், இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த பழனி, மகன் கோகுலை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் மகனை ஆத்திரத்தில் கொலைசெய்து விட்டோம் என்று எண்ணி, அங்குள்ள காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளார். 

இதனையடுத்து விஷயத்தை கேட்டறிந்த காவல் துறையினர், பழனியின் வீட்டிற்கு சென்று கோகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Father Murdered Son due to Torture Want Money Consumption Alcohol and Kanja


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal