ஏலேய் ஓடுங்கடா.. போலீஸ் வந்துருச்சு... ஆபத்தை உணராது மீன்பிடித்து, அறக்கப்பறக்க ஓடிய நாதஸ்கள்..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அருகே உள்ள கால்வாயில் வெள்ளத்தில் மீன் பிடித்து கொண்டு இருந்தவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அய்யபாக்கம் ஏரியிலிருந்து, அம்பத்தூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சுமார் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் வலைகள் மற்றும் சேலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். 

நீர் வெள்ளப்பெருக்கு இடையிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தை துளியளவும் உணராது அலட்சியமாக நீரில் இறங்கி ஒருபுறம் மீன் பிடித்துக் கொண்டும், மற்றொருபுறம் குளித்துக்கொண்டும் இருந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அனைவரையும் பிடிக்க முயற்சித்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைதெறிக்க ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், மழைக்காலங்களில் இதுபோன்று அலட்சியமாக செயல்பட்டு, உயிரை பலி கொடுக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Ayappakkam lake Canal youngsters Were indifferently fishing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->