I.N.D.I கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது அல்ல - திருமாவளவன் புது விளக்கம்! 
                                    
                                    
                                   thirumavalavan say about INDIA 
 
                                 
                               
                                
                                      
                                            திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது என்றும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விசிக வரவேற்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவிக்கையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை விசிகவும் ஏற்கவில்லை. இந்தியா கூட்டணியும் ஏற்கவில்லை.
சனாதனம் விமர்சிக்கப்பட்டு வருவைத்து இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. அது காலம் காலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
I.N.D.I கூட்டணி இந்து மக்களுக்கு எதிராக உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கும் முயற்சி பலிக்காது
I.N.D.I கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது அல்ல. பாஜக, சங்பரிவார்கள் கூட்டத்திற்கு எதிரானது தான் I.N.D.I கூட்டணி.
I.N.D.I கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜகவின் கனவு பலிக்காது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
                                     
                                 
                   
                       English Summary
                       thirumavalavan say about INDIA